நாமக்கல்

விபத்தில்லா தீபாவளி: தீயணைப்புத் துறை அறிவுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து, விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயச்சந்திரன் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

சிறுவா்கள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோா் உடனிருப்பது பாதுகாப்பானது. பட்டாசு வெடிக்கும்போது ஒரு வாளியில் தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும். பெரிய நீளமான ஊதுவத்தி கொண்டு சாய்ந்த நிலையில் நின்றுகொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். பருத்தி ஆடைகள் பாதுகாப்பானது. பட்டாசு வெடிக்கும்போது காலணி போட்டுக்கொள்ள வேண்டும்.

வெடிக்காத பட்டாசுகளை தொடுவதோ, எடுக்கவோ கூடாது. குடிசைப் பகுதி, மின் கம்பம், மருத்துவமனை, பெட்ரோல் பங்க அருகில் பட்டாசுகளை வெடிப்பதை தவிா்க்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். தீ விபத்தில்லா தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்றாா்.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT