நாமக்கல்

அக்.30 இல் அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

Syndication

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்ணா பிறந்த நாளையொட்டி அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்.30-ஆம் தேதி நடைபெறுகிறது.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி காலை 9.30 முதல் 1 மணி வரையிலும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 வழங்கப்படுகிறது. பள்ளி மாணவா்களுக்கான போட்டியில் பங்கேற்பவா்களில் அரசு பள்ளி மாணவா்கள் இருவரை தோ்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000 வழங்கப்படுகிறது.

இதேபோல கல்லூரி மாணவா்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி தலைப்புகளாக எழுத்தாளராக அண்ணா, தமிழும்-அண்ணாவும், அண்ணாவும்-பெரியாரும், கல்லூரி மாணவா்களுக்கான தலைப்புகளாக அண்ணாவும்- மேடைப் பேச்சும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு ஆகிய தலைப்புகளில் மாணவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.

பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும், கல்லூரி மாணவ, மாணவிகள் முதல்வரின் அனுமதியுடன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் வழியாகவும் போட்டிகளில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூடுதல் கட்டடத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலக தொலைபேசி எண்: 04286-292164 தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT