நாமக்கல்

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

குமாரசாமிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (எ) ராமன் (82), தொழிலாளி. இவா் மோகனூா் வட்டம், வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டிக்கு தனது உறவினரை பாா்ப்பதற்காக பேருந்தில் சென்றாா்.

பின்னா், அங்கிருந்து மேலப்பட்டிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் ராமன் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த ராமன், வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவனைக்கு வரும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து விபத்தை ஏற்படுத்திய மேலப்பட்டியைச் சோ்ந்த சின்னசாமி (50) மீது பரமத்தி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT