சேலம்

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த கட்டட மேஸ்திரி சாவு

தேவூர் அருகே புளியம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த கட்டட மேற்பார்வையாளர் புதன்கிழமை உயிரிழந்தார்.

தினமணி

தேவூர் அருகே புளியம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த கட்டட மேற்பார்வையாளர் புதன்கிழமை உயிரிழந்தார்.
 கோபிசெட்டிப்பாளையம் அருகேயுள்ள கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த கட்டட மேற்பார்வையாளர் சின்னசாமி மகன் நல்லசாமி (24). இவர் எடப்பாடியில் கட்டட வேலை செய்ததற்கான கூலி வாங்குவதற்காக கவுந்தப்பாடியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். தேவூர் அருகே உள்ள புளியம்பட்டி பரிசல்துறை பகுதியில் வந்தபோது அப்பகுதியில் இருந்த வேகத்தடையில் தவறி கீழே விழுந்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
 இதுகுறித்து தேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

SCROLL FOR NEXT