சேலம்

கொல்லிமலை கிராமங்களில் காய்த்துக் குலுங்கும் மாமரங்கள்!

தம்மம்பட்டி அருகே கொல்லிமலைப் பகுதி கிராமங்களில், மலைச் சாரல்களில் உள்ள நூற்றுக்கணக்கான மாமரங்களில் தற்போது மாங்காய்கள் காய்த்து குலுங்குகின்றன.

தினமணி

தம்மம்பட்டி அருகே கொல்லிமலைப் பகுதி கிராமங்களில், மலைச் சாரல்களில் உள்ள நூற்றுக்கணக்கான மாமரங்களில் தற்போது மாங்காய்கள் காய்த்து குலுங்குகின்றன.
 கொல்லிமலை கிராமங்களான ஆழ்ரிப்பட்டி, குண்டனி, சேரடிமூலை, வேலிக்காடு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களிலும், அடிவாரப் பகுதிகளான சேரடி, பிள்ளையார்மதி, வாழக்கோம்பை ஆகிய கிராமங்களிலும் தற்போது மாங்காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன.
 மலைவாழ் மக்கள் ஒவ்வொருவரும் தலா 5 முதல் 6 மாமரங்களை வைத்துள்ளனர். இந்த மரங்களில் தற்போது மாங்காய்கள் நன்கு காய்த்துள்ளன.
 மாங்காய்களை மரத்திலிருந்து தொரட்டு மூலம் மலைவாழ் மக்கள் சேதாரமின்றி பறிக்கின்றனர். இயற்கையான முறையில் மாங்காய்களை பழுக்கவைக்கின்றனர். மரம் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் மாங்காய்கள் கிடைக்கின்றன. மாங்காய்களை குவியலாக வைத்து, வைக்கோல் மூம் இயற்கையாக பழுக்க வைக்கின்றனர்.
 கொல்லிமலை அடிவாரப் பகுதியான சேரடியில் பள்ளத்தாக்கு போல காணப்படும் தோட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட மாமரங்களை வைத்திருக்கிறார் செல்லதுரை என்பவர். இவரும், இவரது குடும்பத்தினரும் மாமரங்களில்
 மாங்காய்களை பறித்து பழுக்கவைத்து தம்மம்பட்டி சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 கொல்லிமலை கிராமங்களில் விளையும் மாங்காய்களுக்கு தம்மம்பட்டி, ஆத்தூர் பகுதிகளில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால், மாங்காய்களை இயற்கையான முறையில் பழக்க வைத்து விற்பனை செய்கிறோம். கிலோ ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து காய்கள் வரும் என்றார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT