சேலம் மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயப்பிரகாஷ், எஸ்.கே.அர்த்தநாரி ஆகியோர் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த எஸ்.பி.மேகநாதன் மாற்றப்பட்டார். இந்தநிலையில் ஏற்கெனவே மாவட்ட தலைவராக இருந்த ஜெயப்பிரகாஷ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்த பெரியசாமி, மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக எஸ்.கே.அர்த்தநாரி நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மாவட்டத் தலைவராக முருகன் அதே பதவியில் நீடிக்கிறார்.
இதனிடையே, சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர மாவட்டத் தலைவராக ஜெயப்பிரகாஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரைத் தொடர்ந்து கிழக்கு மாவட்டத் தலைவராக எஸ்.கே.அர்த்தநாரி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆக்ஸ்போர்டு ராமநாதன், எடப்பாடி கோபால், சுப்பிரமணி, பாஸ்கர், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலர் சாரதா தேவி, கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.