சேலம்

தனியார் மகளிர் கல்லூரியில் ரத்ததான விழிப்புணர்வு முகாம்

பெரியேரி ஸ்ரீகைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி

பெரியேரி ஸ்ரீகைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
 தலைவாசல் அடுத்துள்ள பெரியேரி ஸ்ரீகைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவ ஆலோசகர் கே.சாரதா, ஐசிடிசி லேப் டெக்னீஷியன் ஜெ.அருண்குமார், டி.பி. சுகாதார ஆய்வாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததானத்தின் முக்கியத்துவத்தையும், காசநோயின் அறிகுறிகள் பற்றியும் எடுத்துரைத்தனர். இதனையடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ஸ்ரீகைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகள் 10 யூனிட் ரத்தம் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பி.சகுந்தலா, ஏ.மணியரசி மற்றும் வி.செந்தில்ராணி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கல்வி ஒருங்கிணைப்பாளர் கே.பி.ஸ்ரீதேவி, துணைத் தலைவர் எம்.சந்தானலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

SCROLL FOR NEXT