சேலம்

இருகாலூர் கிராமத்தில் சிறப்பு மனு நீதி முகாம்

சங்ககிரி அருகே இருகாலூர் கிராமத்தில் சிறப்பு மனு நீதி திட்ட முகாம் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி

சங்ககிரி அருகே இருகாலூர் கிராமத்தில் சிறப்பு மனு நீதி திட்ட முகாம் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 முகாமிற்கு சங்ககிரி வட்டாட்சியர் வி.முத்துராஜா தலைமை வகித்து அரசின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார். பொதுமக்கள் வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 39 மனுக்களை வட்டாட்சியரிடம் வழங்கினர்
 சமூக நலத்துறை வட்டாட்சியர் அருள்குமார் முன்னிலை வகித்தார்.
 வடுகப்பட்டி அரசு கால்நடை மருந்தக மருத்துவர் முத்துகிருஷ்ணன் விவசாயிகள் கோடை காலத்தில் கால்நடைகளை வெப்பத்திலிருந்து காப்பாற்றுவது குறித்தும், அதனை பராமரிப்பது குறித்தும் விளக்கிக் கூறினார்.
 வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் குகப்பிரியா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

இன்று 650 விமானங்கள் ரத்து; பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படுகிறது: இண்டிகோ சிஇஓ

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT