சேலம்

ஏத்தாப்பூரில் லாரி ஓட்டுநரின் சடலத்தை வாங்க மறுப்பு

பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட வடுகத்தம்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜெயக்குமார் கான்பூரில் உயிரிழந்தார்.

தினமணி

பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட வடுகத்தம்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜெயக்குமார் கான்பூரில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின் புதன்கிழமை வந்த அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட தமயனூர் வடுகத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் ஜெயக்குமார் (30). லாரி ஓட்டுநர். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி இளமதி என்ற மனைவி உள்ளார்.
 இவர் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி சென்னையில் இருந்து கான்பூருக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு 14-ஆம் தேதி சென்றுள்ளார். அன்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்ற ஜெயக்குமார் காலையில் இறந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கான்பூர் போலீஸார், பிரேத பரிசோதனைக்குப்பின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் புதன்கிழமை வடுகத்தம்பட்டிக்கு வந்த ஜெயக்குமாரின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.முத்தமிழ்ச்செல்வன், உறவினர்களிடம் சமாதானப் பேச்சவார்த்தை நடத்தினார். பின்னர் உடலைப் பெற்று உறவினர்கள் தகனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

SCROLL FOR NEXT