சேலம்

ஏரியில் சாயக் கழிவுகள் கலந்ததால் மீன்கள் இறப்பு

சேலம் கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப்பட்டி ஏரியில் சாயக் கழிவுகள் கலந்ததால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன.

தினமணி

சேலம் கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப்பட்டி ஏரியில் சாயக் கழிவுகள் கலந்ததால் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றன.
 சேலம் கொண்டலாம்பட்டியை அடுத்த நெய்காரப்பட்டி பகுதியில் உள்ள கொட்டநத்தம் ஏரி 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி சுற்றுவட்டாரப் பகுதிகளான சின்னேரி, பூலாம்பட்டி, கீரனூர், பெரியூர் உள்ளிட்ட கிராம விவசாயிகளின் பாசனத் தேவைக்காக பயன்படுகிறது.
 இந்த ஏரியின் வாயிலாக இப்பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறுகின்றன. மேலும், ஏரியை ஒட்டியுள்ள பகுதிவாழ் மக்கள் மீன்பிடித் தொழிலும் செய்து வருகின்றனர்.
 கொண்டலாம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் ஏராளமான சாயப்பட்டறைகளின் கழிவுநீர் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவு நீர் இந்த ஏரியில் கலப்பதாக ஏற்கெனவே பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
 இந்த நிலையில் இந்த ஏரியில் கடந்த 2 நாள்களாக ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் கோடைகாலம் என்பதால் தற்போது குறைவான அளவே தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஏற்கெனவே ஏரியில் கலந்த கழிவு நீர் மற்றும் தற்போதைய கோடை வெப்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இறந்து மிதக்கும் இந்த மீன்களால் துர்நாற்றம் வீசுவதாகவும், அதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
 ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் மே 30-இல் சேக்கிழார் குருபூஜை விழா
 ராசிபுரம்,மே.17: ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் மே 30-ஆம் தேதி சேக்கிழார் குருபூஜை விழா நடைபெறுகிறது.
 ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நமிநந்தி அடிகள், தெய்வச்சேக்கிழார் குருபூஜை, நமிநந்தி அடிகள் தீப பேரொளி விழா நடைபெறும். நிகழாண்டு 7-ஆம் ஆண்டு விழாவாக நடைபெறும் நிகழ்ச்சியையொட்டி மே 30-ஆம் தேதி காலை கைலாசநாதர், அறம் வளர்த்த நாயகி, தட்சிணாமூர்த்தி, 63 நாயன்மார்கள், மூலவர், நமிநந்தி அடிóகள், சேக்கிழார் ஆகியோருக்கு பேரோளி வழிபாடு, அன்னதானம் நடைபெறும். இதைத் தொடர்ந்து மாலை மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமிகள் திருவீதி உலா நடைபெறும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

அலையாடும் பொழுதிலே... ஐஸ்வர்யா தத்தா!

SCROLL FOR NEXT