காடையாம்பட்டி வட்டாரத்தில் 44 ஏரிகளில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இலவசமாக மண் எடுக்கும் பணியை சார்-ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள 44 ஏரிகளில் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மண் எடுக்க அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அனுமதியின் படி ஏரிகளில் மண் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த நிலையில் கஞ்சநாயக்கன்ப்பட்டி வடமனேரியில் மண் எடுப்பதற்கான தொடக்க விழா நடைபெற்றது.
ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில், மேட்டூர் சார் -ஆட்சியர் மேகநாதரெட்டி கலந்து கொண்டு பணிகளை தொடக்கி வைத்தார். இதையடுத்து அனைத்து ஏரிகளிலும் மண் அள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு விவசாயிகளுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப அதிகபட்சம் 30 டிராக்டர் மண் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து விவசாயிகளும், மண்பாண்டத் தொழிலாளர்களும் பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு சார்- ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.