சேலம்

ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம்

ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த

தினமணி

ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அன்மையில் பரிசு வழங்கி பாராட்டினர்.
 ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 495 ஒருவர், 494 மதிப்பெண்கள் பெற்று இருவர், 493 மதிப்பெண்கள் பெற்று இருவர், 492 மதிப்பெண்கள் பெற்று இருவர், 490 மதிப்பெண் பெற்று 4 பேர் சிறப்பிடம் பெற்றனர்.
 மேலும் பள்ளியில் 490-க்கு மேல் 11, 480-க்கு மேல் 55, 470- க்கு மேல் 94, 450-க்கு மேல் 145, 400- க்கு மேல் 228 பேர் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 மேலும் கணிதத்தில் 8, அறிவியலில் 24, சமூக அறிவியலில் 45 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நூற்றுக்கு நூறு 3 பாடங்களில் ஒருவரும், இரண்டு பாடங்களில் 12 பேரும் பெற்றுள்ளனர். ஒரு பாடத்தில் 50 பேரும் பெற்றுள்ளனர். மேலும் தமிழில் 99 மதிப்பெண்கள் 77 பேரும், ஆங்கிலத்தில் 4 பேரும் பெற்றுள்ளனர்.
 இந்த மாணவ,மாணவிகளை பாரதியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.இளவரசு, செயலர் ஏ.கே.ராமசாமி, பொருளாளர் எஸ்ஆர்டி.ஆர்.செல்வமணி, இயக்குநர்கள் சந்திரசேகர், பாலக்குமார், செந்தில் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT