சேலம்

ஏற்காட்டில் கோடைவிழா பணி: ஆட்சியர் ஆய்வு

ஏற்காட்டில் 42-ஆவது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி ஆயத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

தினமணி

ஏற்காட்டில் 42-ஆவது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி ஆயத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
 ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி வரும் 27-ஆம் தேதி தொடங்குகிறது.
 ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் மலர்க் கண்காட்சி, கலை நிகழ்ச்சி நடைபெறும் ஊராட்சி ஒன்றிய அரங்கம், தமிழக அரசின் சாதனை விளக்க அரங்கங்கள் அமைக்கும் பணி மற்றும் சுகாதாரப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் பார்வையிட்டு தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 ஆக்கிரமிப்புகள் அகற்றம்...
 ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை நடை
 பெற்றது.
 ஏற்காட்டில் 42-ஆவது கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சி வரும் சனிக்கிழமை (மே 27) தொடங்கவுள்ளது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு விழாவை தொடக்கிவைக்கிறார். இந்த நிலையில் சுற்றுலாப் பகுதி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள், போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருந்த நிலையில் புதன்கிழமை காலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மாவட்ட நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை மற்றும் வட்டார வளர்ச்சித் துறையினர் ஈடுபட்டனர். ஒவ்வொரு முறையும் ஆக்கிரமிப்பு அகற்றுவது விழாக் காலங்களில் மட்டும் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்றும், ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்த அதிகாரிகள் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT