சேலம்

நாகிசெட்டிப்பட்டி பள்ளிக்கு கணித ஆசிரியை நியமனம்: தினமணி செய்தி எதிரொலி

நாகிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கணிதப் பட்டதாரி ஆசிரியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி

நாகிசெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கணிதப் பட்டதாரி ஆசிரியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், நாகிசெட்டிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கணித ஆசிரியரை நியமிக்கக் கோரி பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
 இப் பள்ளியின் முன்னாள் மாணவரும், சங்ககிரி மக்கள் மன்றச் செயலருமான என்.எஸ்.குழந்தைவேலும் தமிழகரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் இப்பள்ளிக்கு கணித ஆசிரியரை நியமிக்க கேட்டிருந்தார். இதுகுறித்து தினமணியில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி செய்தி வெளியானது.
 இதனையடுத்து பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சேலத்தில் மே 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் கருமாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த சேலம் அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த கணிதப் பட்டதாரி ஆசிரியை வனிதா, பணிநிரவல் அடிப்படையில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாகிசெட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணிதப் பட்டதாரி ஆசிரியை பணியிடத்தை தேர்வு செய்துள்ளார். இந்தப் பள்ளிக்கு கணித ஆசிரியை நியமனம் செய்த தமிழக அரசு, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் த. உதயசந்திரன் ஆகியோருக்கு பள்ளியின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT