சேலம்

ரெட்டிப்பட்டி ஏரியில் வண்டல் மண் எடுக்க 15 விவசாயிகளுக்கு அனுமதி

சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ரெட்டிப்பட்டி ஏரியில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள

தினமணி

சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ரெட்டிப்பட்டி ஏரியில் வண்டல் மண் எடுத்துக் கொள்ள 15 விவசாயிகளுக்கு வருவாய்த் துறை சார்பில் வழங்கப்பட்ட ஆணையை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா புதன்கிழமை வழங்கினார்.
 அ.தாழையூர் கிராமம் ரெட்டிப்பட்டி ஏரியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து ஏரியில் உள்ள வண்டல் மண்ணை விவசாயப் பணிகளுக்கு எடுத்துக்கொள்ள 15 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகள் வண்டல் மண்ணை எடுத்துக் கொள்வதற்கான அனுமதி வழங்கும் நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா தலைமை வகித்து விவசாயிகளுக்கு ஆணையை வழங்கினார்.
 இதில் வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன், வட்டாட்சியர் வி.முத்துராஜா, வருவாய் ஆய்வாளர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT