முகப்பு
சேலம்

மோட்டார் சைக்கிள் திருட்டு: இளைஞர் கைது

சங்ககிரியில் மோட்டார் சைக்கிள் திருடியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

சங்ககிரியில் மோட்டார் சைக்கிள் திருடியதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
சங்ககிரி,  நல்லப்ப நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்த தொழிலாளி வாசுதேவன் மகன் பழனிசாமி (36).  இவர் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மளிகைக் கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பொருள்களை வாங்கிக் கொண்டு  திரும்பி வந்தபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அப்போது, வி.என்.பாளையம் பகுதியில் ஒருவர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்வதைக் கண்டுபிடித்து பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து சங்ககிரி போலீஸில் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில்,  சங்ககிரி பொந்துகிணறு மேல்பாறைவளவு பகுதியைச் சேர்ந்த ராமசாமி  மகன் அய்யாவு (39) மோட்டார்சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.  போலீஸார் அவரைக் கைது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →