தம்மம்பட்டி அருகே சேரடி மலைப் பாதையில் மழைக் காரணமாக சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை அடுத்த சேரடி, சேலம் மாவட்டத்தின் கடைசி ஊராகும். சேரடியிலிருந்து தான் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தொடங்குகிறது. கொல்லிமலையில் வேலிக்காடு, கீரைக்காடு, குண்டனி, ஆழ்ரிப்பட்டி உள்ளிட்ட 50}க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் இந்த வழியாகத் தான் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றுவருகின்றனர். அரசுப் பேருந்துகள் எதுவும் செல்வதில்லை.
இந்த நிலையில் கடந்த 10 நாள்களாக பெய்துவரும் தொடர் மழையால், சேரடியிலிருந்து கொல்லிமலைக்குச் செல்லும் மண்பாதை முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாகத் தனியார் வாகனங்களையே நம்பியுள்ள மக்களால், கொல்லிமலை கிராமங்களுக்கு வாகனங்களில் செல்வது பெரும் அவதியாக உள்ளது. இதனால் கொல்லிமலை மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஷெட்யூல்டு டிரைப் (மலையாளி) பேரவையின் சேலம் மாவட்ட நிர்வாகி வாழக்கோம்பை சக்திவேல், சேரடிக்கான முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ராஜி மற்றும் பொதுமக்கள் கூறியதாவது: சேரடியில் மழையால் அரித்துவரும் கொல்லிமலைப் பாதையால் எந்த வாகனங்களும் அடிவாரத்துக்கு வரவும், கீழிலிருந்து மேலே செல்லவும் முடியாமல் பொதுமக்கள் தடுமாறி வருகின்றோம். எனவே, சேலம் மாவட்ட நிர்வாகம் மழையால், நாளுக்குநாள் அரித்துவரும் மலைப் பாதையை உடனடியாக சீரமைத்து, தொடர்ந்து சேரடியில் சேதமாகிவரும் சேரடி} தம்மம்பட்டி சாலையையும் சீரமைத்து தரவேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.