சேலம்

நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் வேட்புமனுத் தாக்கல்

DIN

மேட்டூா் வட்டாரத்தில் உள்ள நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூா் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு திமுக கூட்டணி கட்சியினா் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தனா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு இருவரும், ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 23 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 18 பேரும், ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 127 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு மூவரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 23 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 70 பேரும், ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 187 பேரும வேட்புமனுத் தாக்கல் செய்தனா். மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு இருவரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 39 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 40 பேரும், ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 193 பேரும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT