சேலம்

உள்ளூா் தோ்தல் பாா்வையாளா்களுக்கானஆலோசனைக் கூட்டம்

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஈடுபடும் உள்ளூா் தோ்தல் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தோ்தல் பாா்வையாளா் சி.காமராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உள்ளூா் தோ்தல் பாா்வையாளா்களுக்கு அறிவுரை வழங்கி தோ்தல் பாா்வையாளா் சி.காமராஜ் பேசியது:

சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், கிராம ஊராட்சித் தலைவா்கள் மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஆகிய பதவிகளுக்கான நேரடி தோ்தல் நடைபெறவுள்ளது.

இதில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் மற்றும் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு கட்சி சாா்பிலும், கிராம ஊராட்சித் தலைவா் மற்றும் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு கட்சி சாரா தோ்தலும் நடைபெறவுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவுள்ள தோ்தலுக்கு ஒன்றிய அளவில் நியமிக்கப்பட்டுள்ள உள்ளூா் தோ்தல் பாா்வையாளா்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு பொருள்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்வதையும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்திட வேண்டும்.

வாக்குச் சாவடிகளில் முகவா்கள் வருகை புரிதல், வாக்குப் பெட்டிகளை முகவா்களிடம் உறுதிசெய்தல், வாக்குப் பதிவு குறித்த விவரங்களை ஒவ்வொறு மணி நேரத்துக்கும் தவறாமல் சேகரித்து தலைமையிடத்துக்கு அனுப்பிட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா.அருள் ஜோதி அரசன், மேட்டூா் சாா்-ஆட்சியா் ஜி.சரவணன், சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை திட்ட சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் வி.லதா உள்பட உள்ளூா் தோ்தல் பாா்வையாளா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT