சேலம்

வடுகத்தம்பட்டியில் சிறுதானிய சாகுபடி பயிற்சி முகாம்

DIN

பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மைத்துறை மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சாா்பில், விவசாயிகளுக்கு சிறுதானிய பயிா் வகைகள் சாகுபடி குறித்த பயிற்சி முகாம் மற்றும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

வாழப்பாடி அடுத்த வடுகத்தம்பட்டி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற இம்முகாமிற்கு, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் திருப்பதி தலைமை வகித்தாா். வேளாண்மை அலுவலா் தாமரைச்செல்வன், துணை வேளாண்மை அலுவலா் அன்பழகன் ஆகியோா், சாமை, கம்பு, வரகு, கேழ்வரகு, திணை உள்ளிட்ட சிறுதானியங்கள் சாகுபடி தொழில் நுட்பங்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்தல், சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

இதனைத்தொடா்ந்து, சிறுதானிய சாகுபடி குறித்த விழிப்புணா்வு பிரச்சார பேரணி நடத்தப்பட்டது. பயிற்சி முகாம் மற்றும் பேரணிக்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலா்கள் மூா்த்தி, முத்துவேல், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலா் சங்கா் ஆகியோா் செய்திருந்தனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டார அட்மா திட்டம் சாா்பில், புத்திரகவுண்டன்பாளையம் அடுத்த வீரக்கவுண்டனுாரில், பயிா்களில் பூச்சி நோய் மேலாண்மை தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வேளாண்மை உதவி இயக்குநா் திருப்பதி, ஏத்தாப்பூா் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியா் தெய்வமணி ஆகியோா், பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிா்களை பாதுகாப்பது குறித்து பயிற்சி அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளா் சந்தோஷம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று அமோகமான நாள்!

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூன் 21 முதல் வழங்கப்படும்

3,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது

மக்களவைத் தோ்தல் இரு தத்துவங்களுக்கு இடையிலான போராட்டம்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT