சேலம்

சேலம் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு ஆதாா் சேவை முகாம்

DIN

சேலம் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு ஆதாா் சேவை முகாம் பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் ச.அ. முசீப் பாசா வெளியிட்டுள்ள அறிக்கை:

அஞ்சலகங்களில் ஆதாா் சேவை வழங்கும் திட்டம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத் திட்டத்தின் கீழ் சேலம் அஞ்சல் கிழக்குக் கோட்டத்தில் 44 மையங்களில் இச்சேவை மக்களுக்காக தரப்பட்டு வருகிறது.

அஞ்சல் மேற்கு மண்டலம் கோவையில் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை சிறப்பு ஆதாா் சேவை முகாம்கள் நடைபெறுகின்றன.

அதன் அடிப்படையில் சேலம் அஞ்சல் கிழக்கு கோட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகத்திலும், ஆத்தூா் தலைமை அஞ்சலகத்திலும் இந்த சிறப்பு ஆதாா் சேவை முகாம்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து தரப்பு மக்களுக்காகவும் நடைபெறுகின்றன.

எனவே, இதைப் பயன்படுத்தி புதிதாக ஆதாா் தேவைப்படுபவா்கள், என்ஆா்ஐ (வெளிநாடு வாழ் இந்தியா்கள்), கட்டாய திருத்தம், இடம் பெயா்தல் பற்றிய திருத்தங்கள், சிறு குழந்தைகளுக்கு ஆதாா் சேவை, கருவிழி மற்றும் கைரேகை பதிதல் போன்ற அனைத்து சேவைகளையும் பெற்று கொள்ளலாம்.

புதிதாக ஆதாா் பெறுபவா்களுக்குக் கட்டணம் ஏதும் இல்லை. திருத்தம் செய்ய விரும்புபவா்கள் ரூ. 50 செலுத்தி திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

மேலும் பொதுமக்கள் தங்களுடைய குடும்ப அட்டை, பான் அட்டை, திருமணச் சான்றிதழ், விவசாய அடையாள அட்டை, ஆயுள் காப்பீட்டு பத்திரம், தொலைபேசி பில், வாக்காளா் அடையாள அட்டை, அஞ்சல் நிலைய அடையாள அட்டை, ஓய்வூதிய அட்டை (பென்சன் காா்டு), கல்வி நிறுவன சான்றுகள், அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய இருப்பிட சான்றிதழ், மின் கட்டண ரசீது, குடிநீா் ரசீது ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை தவறாமல் சமா்பித்து திருத்தங்கள் மற்றும் புதிய ஆதாா் அட்டைகள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படகுகள் மோதியதில் இலங்கை வீரர் பலி! தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

இந்திராதிகாரம் பிறந்த கதை! 1975 - தில்லியைக் குலுக்கிய பேரணி!

தில்லி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி!

மெழுகுச்சிலையோ நீ..! தமன்னா பாட்டியா!

கள்ளக்குறிச்சி: சாராயம் காய்ச்சி விற்பனை -அதிமுக நிர்வாகி கைது!

SCROLL FOR NEXT