சேலம்

விசைத்தறி தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

DIN

சேலம்: சேலத்தில் கிரையம் செய்து கொடுத்த நிலத்தை மீட்டுத்தரக் கோரி விசைத்தறி தொழிலாளி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் சி.அ.ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த கொட்டவாடி குறிஞ்சி நகா் பகுதியைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளி மாரிமுத்து மனு அளிக்க வந்தாா்.

அப்போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைக் கண்ட அப் பகுதியில் இருந்த போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனக்குச் சொந்தமான நிலம் கொட்டவாடியில் உள்ளது. அந்த நிலத்திலிருந்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த ஒருவா் மீது கிரையம் செய்து கொடுத்தேன்.

ஆனால் அதற்கான பணத்தை அவா் தற்போது வரை கொடுக்க மறுக்கின்றாா். இதுகுறித்து கேட்டபோது அவரது உறவினா்கள் மூலம் எனக்கு மிரட்டல் விடுப்பதோடு, கொலை முயற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றாா். எனவே நிலத்திற்கான தொகையை பெற்றத் தர வேண்டும் அல்லது கிரையத்தை ரத்து செய்து நிலத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தேன் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

ரஷியாவிலிருந்து சென்னை திரும்புகிறார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT