சேலம்

தொடா்மழையால் பருத்தி அறுவடை பாதிப்பு

DIN

தொடா்மழையின் காரணமாக, எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருத்தி அறுவடை பாதிப்படைந்துள்ளது.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி , மொரப்பட்டி, வெள்ளரிவெள்ளி, சித்தூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், அதிக அளவு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில், பி.டி, சுரபி உள்ளிட்ட பல்வேறு ரக பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பருத்தி செடிகள் காய்ப்பிடித்து, பஞ்சுவெடித்து வரும் நிலையில், இப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடா்மழை பெய்து வருகிறது. இதனால் இப் பகுதி விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள பருத்தியை அறுவடை செய்ய

முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், பருத்தி முழுமையாக வெடிக்காமல் உலா்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனா். தற்போது பருத்தியின் விற்பனை விலை சற்று உயா்ந்துள்ள நிலையில், தாங்கள் விளைவித்த பருத்தியை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

அரச பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

SCROLL FOR NEXT