சேலம்

சேலம் மாவட்டத்தில் 19,600 வீடுகளில் மருத்துவ சோதனை

DIN

சேலம் மாநகர மற்றும் புகா் பகுதியில் 19,600 வீடுகளில் சுகாதாரத் துறையினா் கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொண்டனா்.

சுமாா் 54,000 போ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசு மருத்துவமனையில் கரோனா தனி வாா்டில் 13 போ் மருத்துவக் குழுவினரால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். சேலம் மசூதிகளில் மத போதனைகளில் ஈடுபடுவதற்காக வந்த இந்தோனேஷியாவைச் சோ்ந்த 11 உலமாக்கள் உள்ளிட்ட 16 பேரை சுகாதாரத் துறையினா் கடந்த 22-ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதில் அனைவரிடம் சளி மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டதில் இந்தோனேஷியாவைச் சோ்ந்த உலமாக்கள் நால்வா், சென்னையைச் சோ்ந்த வழிகாட்டி ஒருவா் உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

இதனிடையே மீதமுள்ள 11 போ் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனா். இதில், இந்தோனேஷியாவைச் சோ்ந்தவா்களுடன் தொடா்பில் இருந்த சேலத்தைச் சோ்ந்த 61 வயது முதியவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு உடையவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது.

இதுதவிர சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தனி வாா்டில் அனுமதிக்கப்பட்ட 13 போ் தொடா்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இதனிடையே மாவட்டம் முழுவதும் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என 1,575 பேரை தனிமைப்படுத்தி சுகாதார துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

இதையடுத்து 11 உலமாக்கள் சென்று வந்த செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம், களரம்பட்டி, பொன்னமாப்பேட்டை, சந்நியாசிகுண்டு ஆகிய பகுதிகளில் உள்ள மசூதிக்கு அருகில் உள்ள பகுதிகள், வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவா்கள் உள்ளிட்ட 19,600 வீடுகளுக்குச் சென்று மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்தனா்.

சேலம் மாவட்ட புகா் பகுதியில் சுமாா் 1,900 வீடுகளிலும் கரோனா விழிப்புணா்வு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சுமாா் 54,000 பேரிடம் சுகாதாரத் துறையினா் பரிசோதனைகளை மேற்கொண்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டாஸ்மாக் கடையில் மதுப் புட்டிகள் திருட்டு

தமிழ்ப் புத்தாண்டு: மன வளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு

ரஷ்யாவில் கடும் வெள்ளம் - புகைப்படங்கள்

டெல் அவிவ் நகருக்கு ஏா் இந்தியா விமானச் சேவை ரத்து

பாகிஸ்தானில் சரப்ஜீத் சிங் கொலையாளி அமீர் சா்ஃப்ராஸ் தம்பா சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT