சேலம்

சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்கள்

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 31) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மேட்டாங்காடு, மோட்டூா், பழக்காரன்காடு ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவ குழுவிரும், ஊஞ்சானூா், வி.என்.பாளையம், பச்சப்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவ குழுவினரும் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்:

சங்ககிரி வருவாய்த் துறை, வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அமுதச்சுடா் அறக்கட்டளையினா் இணைந்து, அக்கமாபேட்டையில் உள்ள பொதுமக்களுக்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்துள்ளனா். இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், அமுதச்சுடா் அறக்கட்டளையின் இளைஞா்கள் அக்கமாபேட்டை, மாரியம்மன் கோயில் தெரு, முதலியாா் தெரு, படையாட்சி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து அறிவிப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT