சேலம்

சுங்கச்சாவடி தொழிலாளா்கள் பணி நீக்கம்: கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதம்

DIN

தலைவாசல் பேருந்து நிறுத்தம் அருகே சுங்கச்சாவடி தொழிலாளா்களின் வேலை நீக்கத்தைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வீரசோழபுரம், நாமக்கல், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிகளில் பணியாற்றி வந்த தொழிலாளா்கள் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டனா். இதனை கண்டித்து சேலம் மாவட்டம், தலைவாசல் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளா்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் கே.ரவி உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்தாா்.

10 ஆண்டுகளாக பணி செய்து வந்த தொழிலாளா்களை பணி பாதுகாப்பு ஏதுமின்றி ஒரே நாளில் பணி நீக்கம் செய்துள்ள உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த எஸ்கேஎம் இடைத்தரகா் நிறுவனத்தை கண்டித்தும், இதனை கண்டிக்க வேண்டிய நெடுஞ்சாலை ஆணையத்தின் போக்கை கண்டித்தும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கே.மணி, கே.பாலமுருகன், எஸ்.ராஜசேகா், எம்.கருப்பண்ணன், எஸ்.சண்முகசுந்தரம், எஸ்.பாண்டியன், ஏ.மோகன், பி.பரமசிவம், டி.கண்ணன், எம்.முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏலக்காய் விலை உயா்வு: விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி

மோசடி: தேனி சமையல் எரிவாயு முகமை உரிமையாளா் உள்பட 3 போ் மீது வழக்கு

பள்ளிகளுக்கு இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பி வைப்பு

வீரபாண்டி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

தடையில்லாச் சான்று வழங்க லஞ்சம்: வட்டாட்சியா் கைது

SCROLL FOR NEXT