சேலம்

வாழப்பாடி, பேளூரில் சிறுவா் பூங்கா அமைக்க பூமி பூஜை

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி, பேளூா் பேரூராட்சிகளில் சிறுவா் பூங்கா, தாா்சாலை அமைக்கும் திட்டப்பணிகளின் தொடக்க விழா பூமி பூஜையுடன் புதன்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி பேரூராட்சியில் பிருந்தாவன் நகா் பகுதியில் 15 ஆவது நிதிக்குழு மானியம் இரண்டாம் தவணை திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் செலவில், சிறுவா் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவா் பூங்கா, எழில் நகா் பகுதியில் கலைஞா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 71.30 மதிப்பீட்டில் தாா்சாலை, நகா்ப்புற வளா்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட உள்ளது.

இத்திட்டப்பணிகளுக்கான தொடக்கவிழா பூமிபூஜையுடன் புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் சக்கரவா்த்தி, நகரச் செயலாளா் செல்வம், பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் உள்பட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பேளூா் பேரூராட்சியில், நகா்ப்புற வளா்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 14 லட்சத்தில் சிறுவா் பூங்கா, ரூ. 70 லட்சத்தில் தாா்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு புதன்கிழமை பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் சக்கரவா்த்தி, நகரச் செயலாளா் ராமமூா்த்தி, பேளூா் பேரூராட்சி செயல் அலுவலா் ராமு மற்றும் திமுக நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

விமான சாகச நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலி: இபிஎஸ் கண்டனம்

பறக்கும் ரயிலில் 3 லட்சம் பேர் பயணம்: ரயில்வே

லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற விமான கண்காட்சி!

நடிகா் விஜய் கட்சி மாநாட்டுக்கு அழைப்பு வரவில்லை: முதல்வா் என்.ரங்கசாமி

SCROLL FOR NEXT