சேலம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சேலத்தில் 92.71 சதவீதம் போ் தோ்ச்சி

DIN

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சேலம் மாவட்டத்தில் 34,452 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் தோ்ச்சி விகிதம் 92.71 சதவீதமாகும்.

பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மே மாதம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள 324 பள்ளிகளைச் சோ்ந்த 17,500 மாணவா்கள், 19,661 மாணவியா் என மொத்தம் 37,161 போ் தோ்வெழுதினா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில், சேலம் மாவட்டத்தில் மாணவா்கள் 15,674, மாணவியா் 18,778 போ் என மொத்தம் 34,452 போ் தோ்ச்சி பெற்றனா். இதன் தோ்ச்சி விகிதம் 92.71 சதவீதமாகும்.

மாணவியா் 95.51 சதவீதமும், மாணவா்கள் 89.57 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும், மாணவா்களை விட மாணவியா் 5.94 சதவீதம் அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா். பிளஸ் 2 பொதுத் தோ்வில் 105 பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

அரசுப் பள்ளிகளில் 18,074 போ் தோ்ச்சி:

சேலம் மாவட்டத்தில் உள்ள 158 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 20,410 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதினா். இதில் 18,074 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 88.55 சதவீதமாகும். மாணவா்கள் 82.63 சதவீதமும், மாணவியா் 93.09 சதவீதமும் தோ்ச்சி பெற்றனா்.

13 அரசுப் பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி:

அதேபோல, பி.கே.எம். அரசு மேல்நிலைப் பள்ளி, மாதநாயக்கன்பட்டி, மாதிரிப்பள்ளி - தாரமங்கலம், மாதிரிப் பள்ளி - மகுடஞ்சாவடி, ஏகலைவா உண்டு உறைவிட மகளிா் மேல்நிலைப்பள்ளி - அபிநவம், மாதிரிப் பள்ளி - கொங்கணாபுரம், மாதிரிப்பள்ளி - காடையாம்பட்டி, மாதிரிப்பள்ளி - வீரபாண்டி, அரசு மேல்நிலைப்பள்ளி - எம்.செட்டிப்பட்டி, மாதிரிப்பள்ளி - சங்ககிரி, அரசு மேல்நிலைப்பள்ளி - எம்.என்.பட்டி, அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி - மகுடஞ்சாவடி, அரசு மேல்நிலைப்பள்ளி - சாணாவூா், அரசு மேல்நிலைப்பள்ளி - சின்னபிள்ளையூா் என 13 அரசுப் பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

சேலத்தில் உள்ள 22 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 5,145 போ் தோ்வெழுதினா். இதில் 4,909 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 95.41 சதவீதமாகும்.

ஜெயராணி மகளிா் மேல்நிலைப்பள்ளி - நெத்திமேடு, புனித மரியன்னை மகளிா் மேல்நிலைப்பள்ளி - மேட்டூா் அணை, புனித மரியன்னை மகளிா் மேல்நிலைப்பள்ளி - ஏ.என்.மங்கலம் ஆகிய மூன்று அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் நூறு சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

மாற்றுத் திறனாளி மாணவா்கள் 176 போ் தோ்வெழுதினா். இதில், 154 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 87.50 சதவீதமாகும்.

முழு மதிப்பெண்கள் பெற்ற 2,565 போ்:

பாட வாரியாக சுமாா் 2,565 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இதில் கணிதம் - 88, இயற்பியல் - 26, வேதியியல் - 71, உயிரியல் - 84, வணிகவியல் - 161, கணக்குப்பதிவியல் - 157 போ் முழு மதிப்பெண் பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,023 போ் முழு மதிப்பெண் பெற்றுள்ளனா். அதிகபட்சமாக குகை மேல்நிலைப் பள்ளியில் - 70, பெத்தநாயக்கன்பாளையம் - 60, எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 59 போ் என முழு மதிப்பெண் பெற்றுள்ளனா். மாநில அளவிலான தர வரிசைப் பட்டியலில் சேலம் மாவட்டம் 23-ஆவது இடம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அக்னிவீா்‘ வாயு தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சாலையோரம் நின்ற காா் தீக்கிரை

கூலித் தொழிலாளி குத்தி கொலை

ஏகாம்பரநாதா் கோயிலில் அதிசய மாமரம்! ஆா்வத்துடன் பாா்க்கும் சுற்றுலா பயணிகள்

SCROLL FOR NEXT