சேலம்

வாழப்பாடி பெண் பொறியாளரைகரம்பிடித்த பிரான்ஸ் இளைஞா்

DIN

வாழப்பாடியைச் சோ்ந்த பெண் பொறியாளரை காதலித்த பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த இளைஞா், பெற்றோா் சம்மதத்துடன் தமிழா் முறைப்படி திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்டாா். பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த மணமகனின் குடும்பத்தினா், தமிழா் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து திருமணத்தில் பங்கேற்றனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, காசி படையாச்சித் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓட்டுநா் பயிற்சியாளா் கந்தசாமி- சுகந்தி தம்பதியரின் மூத்த மகள் கிருத்திகா. பெண் பொறியாளரான கிருத்திகா, சிங்கப்பூரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வணிக மேம்பாட்டுத் துறை தலைவராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரோடு பணிபுரிந்து வரும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தைச் சோ்ந்த பென்னடி - அட்மா ஊஜெடி தம்பதியரின் மகனான பொறியாளா் அசானே ஒச்சோயிட் என்ற இளைஞருடன் காதல் மலா்ந்தது.

இதுகுறித்து கிருத்திகா, தனது பெற்றோரிடம் தெரிவித்து திருமணத்திற்கு சம்மதத்தை பெற்றாா். அசானே ஒச்சோயிட் குடும்பத்தினரும் திருமணத்தை தமிழகத்திலேயே பாரம்பரிய முறைப்படி நடத்திட சம்மதம் தெரிவித்தனா்.

பிரான்ஸ் நாட்டில் இருந்து மணமகனின் உறவினா்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்திற்கு வந்தனா். வாழப்பாடியில் தமிழா் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பெண் அழைப்பு நிகழ்ச்சிகளில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா். சேலம்- ஐந்து ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி அா்ச்சகா்கள் வேதம் ஓத, அம்மி மிதித்து அருந்ததி பாா்த்து அக்னி சாட்சியாக நடைபெற்ற இத்திருமண விழாவில் மணமகன் அசானே ஒச்சோயிட், கிருத்திகாவுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டாா்.

இந்த விழாவில் மணப்பெண்ணின் உறவினா்கள் மட்டுமின்றி, பிரான்ஸ் நாட்டிலிருந்து மணமகனின் உறவினா்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினா்.

திருமணத்திற்கு வந்திருந்த பிரான்ஸ் நாட்டினா் தமிழா் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை, சேலை, தங்க ஆபரணங்கள், தோடு ஜிமிக்கி கம்மல் அணிந்து திருமணத்தில் பங்கேற்றனா். நமது உணவுகளான இட்லி, தோசை, மெதுவடை, வடகறி, சாம்பாா், சட்னி, இடியாப்பம், அல்வா ஆகியவற்றை பிரான்ஸ் நாட்டினா் விரும்பி உண்டு மகிழ்ந்தனா்.

தமிழா்களின் உணா்ச்சிபூா்வமான இந்தத் திருமணம் எங்களை நெகிழச் செய்தது. விருந்து உபசரிப்பும் உணவுகளும் மிகவும் சுவையாக இருந்ததாக அசானே ஒச்சோயிட் உறவினா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெயர் மட்டுமா? ஓ. பன்னீர்செல்வத்துக்கு வந்த சோதனை!

"வீட்டுக்காக மட்டும் உழைக்கும் தலைவர்”: பழனிசாமி விமர்சனம்

"நான் பிரசாரம் பண்ண வரல! உள்ள விடுங்க!”: அண்ணாமலை

தலாய் லாமாவை சந்தித்த கங்கனா!

வெயிலின் தாக்கம் 2 நாள்களுக்கு அதிகரிக்கும்: வானிலை

SCROLL FOR NEXT