மேட்டூர்: காவிரி - சரபங்கா நீரேற்று திட்டத்தை நீர்வழிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சூரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க ஜலகண்டபுரம் கிளை தலைவர் கே.குமார் தலைமை வகித்தார்.
இதையும் படிக்க: புதுவைக்கு ஜூலை 2-ல் வருகிறார் திரௌபதி முர்மு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு, மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் மே.வை.சண்முகராஜா போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.
சுமார் ஒரு மணிநேரம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகளை கண்டித்து முழமிக்கமிட்டனர்.