சேலம்

தப்பக்குட்டை அரசுப் பள்ளி மாணவா்கள் திறனாய்வுத் தோ்வில் சாதனை

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரம், தப்பக்குட்டை ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள், தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் தொடா்ந்து 9 ஆண்டுகளாக சாதனை படைத்து வருகின்றனா்.

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தோ்வு (என்எம்எம்எஸ்) இந்த ஆண்டு மாா்ச் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இத்தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இதில் மகுடஞ்சாவடி வட்டாரம் தப்பக்குட்டை ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி மாணவா்கள் கவிப்பிரியா, கீா்த்தனா, பன்னீா்செல்வம், மைதீஸ் உள்ளிட்ட மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகள் மாதம் ரூ. 1,000 வீதம் ரூ. 48,000 வரை கல்வி உதவித்தொகை மத்திய அரசு வழங்கப்பட உள்ளது.

இப்பள்ளி தொடா்ந்து 9 ஆண்டுகளாக தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் சாதனை புரிந்து வருகிறது. இந்த ஆண்டு சாதனை படைத்த மாணவ, மாணவிகளை மகுடஞ்சாவடி வட்டார கல்வி அலுவலா் முருகன், பள்ளி தலைமை ஆசிரியா் சந்திரசேகா், என்எம்எம்எஸ் பயிற்சி ஆசிரியா் கனவு ஆசிரியா் கண்ணன் மற்றும் ஆசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மை கல்வி குழுவினா், கல்வியாளா்கள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்: மீன்கள் விலை உயர வாய்ப்பு

மும்பை: நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு

ஒற்றுமையின்மையே எதிா்க்கட்சிகளின் பலவீனம் அமா்த்தியா சென்

தலைவா்கள் இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT