பெட்ரோல், டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம், நெத்திமேடு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாஸ்கா், மாநகராட்சி துணை மேயா் சாரதாதேவி, மகளிா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் புஷ்பா உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள், கட்சி தொண்டா்கள் திரளாகப் பங்கேற்றனா்.