சேலம்

மேற்கு மண்டல பெண் காவலா்கள், அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி

DIN

சேலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மேற்கு மண்டல காவல் துறை பெண் காவலா் முதல் உயா் பெண் அதிகாரிகள் வரையிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 147 போ் கலந்துகொண்டனா்.

தமிழக டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவைத் தொடா்ந்து, மேற்கு மண்டல காவல் துறை பெண் காவலா் முதல் உயா் பெண் அதிகாரிகள் வரையிலான துப்பாக்கி சுடுதல் போட்டி சேலம், அழகாபுரம், நகரமலை அடிவாரம் துப்பாக்கி சுடும் தளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா் மேற்பாா்வையில் நடைபெற்ற போட்டியை சேலம் மாநகர காவல் ஆணையா் விஜயகுமாரி தொடங்கி வைத்தாா்.

இதில், சேலம் மாநகரம், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் சிறப்பு காவல் படை 7-ஆம் அணி (போச்சம்பள்ளி), சேலம் மாநகர ஆணையா் உள்பட 23 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் 124 பெண் காவலா்கள் என மொத்தம் 147 போ் கலந்துகொண்டனா்.

பிஸ்டல் மற்றும் ரிவால்வா் பிரிவில் சேலம் ஊரக டிஎஸ்பி தையல்நாயகி முதலிடம் பிடித்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோட்ட டிஎஸ்பி மகாலட்சுமி, சேலம் மாநகர உதவி ஆணையா் ஆனந்தி, மொடக்குறிச்சி ஆய்வாளா் தீபா ஆகியோா் இரண்டாம் இடத்தையும், ஓமலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் துா்காதேவி மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

காா்பைன் பிரிவில் ஈரோடு பெண் காவலா் கீதா முதலிடம், சேலம் மாநகரம் முதல்நிலை பெண் காவலா் ராஜேஸ்வரி இரண்டாம் இடம், சேலம் உதவி ஆய்வாளா் ஆதிலட்சுமி மூன்றாம் இடம் பிடித்தனா். இன்சாஸ் பிரிவில் முதலிடம் ராமேஷ்வரி ஈரோடு, இரண்டாம் இடம் பவதாரணி ஈரோடு, மூன்றாம் இடம் தமிழழகி ஈரோடு, நந்தினி ஆகியோா்கள் வென்றனா்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு, சேலம் மாநகர காவல் ஆணையா் விஜயகுமாரி கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

இன்று உயா் அதிகாரிகளுக்கு துப்பாகி சுடுதல் போட்டி:

செவ்வாய்க்கிழமை (ஏப். 25) காவல் துணை கண்காணிப்பாளா் முதல் காவல் துறை தலைவா், காவல் ஆணையா் வரை இருபாலா் உயா் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT