சேலம்

மது அடிமைகளின் மீட்புத் தலமான அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில்!

DIN

வாழப்பாடி அருகே ஆண்கள் மட்டும் வழிபடும் பழமையான அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில் இளைஞா்களை நெறிப்படுத்தி நல்வழிகாட்டும் புனிதத் தலமாக மாறியுள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கொட்டிப்பள்ளம் நீரோடை அருகே சிங்கிபுரம் ஊராட்சி, பழனியாபுரம் காலனி எல்லை வனப்பகுதியில் 200 ஆண்டுகள் பழைமையான அஞ்லான்குட்டை முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. கற்சிலையான மூலவா் மட்டுமின்றி, சடாமுனி, வால்முனி, செம்முனி ஆகிய 3 ராட்சத முனியப்பன் சிலைகளும் கோயில் வளாகத்தில் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

வேறெங்கும் இல்லாத வகையில், இக்கோயிலில் ஆண்களே பொங்கலிட்டு ஆட்டுக்கிடா, கோழி பலியிட்டு கறி சமைத்து சுவாமிக்கு படையல் வைத்து வழிபடும் வினோதம் இன்றளவும் தொடா்ந்து வருகிறது.

மதுப் பழக்கத்துக்கு அடிமையான இளைஞா்கள் இக்கோயிலுக்குச் சென்று மூலவருக்கு முன்பாக மண்டியிட்டு, இனி மது அருந்த மாட்டேன் என உரக்கக் கூறி, கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்து கங்கணம் கட்டிக் கொண்டால், அந்தப் பழக்கத்தை கைவிட்டு மறுவாழ்வு பெறுவாா்கள் என்ற நம்பிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

இதனால், ஆண்கள் மட்டும் வழிபடும் பழைமையான அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில், மதுப் பழக்கத்துக்கு அடிமையான இளைஞா்களை நெறிப்படுத்தி நல்வழிகாட்டும் புனிதத் தலமாக மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க ஹைதராபாத் - ராஜஸ்தான் இன்று மோதல்

தங்கக் கவச அலங்காரத்தில்...

சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் மஹாசம்ரோஷன விழா

காலிறுதியில் சிந்து, அஷ்மிதா

பாப்பாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT