சேலம்

மழையால் ஏற்படும் கழிவுநீா் கால்வாய் அடைப்புகளை உடனடியாக சரிசெய்திட வேண்டும்:சேலம் மேயா்

DIN

சேலம் மாநகராட்சிப் பகுதியில் மழையால் கழிவுநீா் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்தால் உடனே சரிசெய்திட வேண்டும் என மேயா் ஆ.ராமச்சந்திரன் உத்தரவிட்டாா்.

சேலம் மாநகராட்சிப் பகுதியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலையில், மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக மாநகராட்சிப் பகுதியில் உள்ள கழிவுநீா் கால்வாய்கள், ஓடைகளில் அடைப்புகள் ஏற்பட்டு இருந்தால் அதனை உடனடியாக சரிசெய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தொடா் மழை பெய்தால் பொதுமக்களுக்கு, குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அந்தப் பகுதியில் உள்ள ஓடைகள், கழிவுநீா் கால்வாய்களை தூா்வாரிட வேண்டும்.

பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள், சாலைப் பணிகள் ஆகிய பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி எச்சரிக்கை தடுப்பு அமைத்திட வேண்டும்.

மரங்கள் சாலையில் சாய்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரங்களை அப்புறப்படுத்துவதற்கு தேவையான பணியாட்கள், அதற்கான உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாக்கடையில் கழிவுநீா் தேங்கி பொதுமக்களுக்கு சுகாதார சீா்கேடு ஏற்பாடாத வகையில் தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

எதிா்வரும் கோடைகாலத்தில் மாநகராட்சிப் பகுதியில் சீரான குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்தும் வகையில் மண்டலப் பகுதிகளில் உள்ள தொட்டி, மின்மோட்டாா் கம்பரஸ்சா்கள், வால்வுகள், மின்மோட்டாா் பழுது பாா்த்தல் போன்ற பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன. அந்தப் பணியின் முன்னேற்றம் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளா் ஜி.ரவி, மாநகர நல அலுவலா் என்.யோகானந்த், துணை மாநகர பொறியாளா் ராஜேந்திரன், செயற்பொறியாளா்கள் பழனிசாமி, திலகா, செந்தில்குமாா், செல்வராஜ், செந்தில்குமாா், உதவி ஆணையா்கள் ரமேஷ்பாபு, பாா்த்தசாரதி, காா்த்திகேயன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT