சேலம்

வாழப்பாடியில் இன்று திரெளபதி அம்மன் தீ மிதித் திருவிழா

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிரசித்திப் பெற்ற திரெளபதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை, தீ மிதித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

வாழப்பாடி அக்ரஹாரம், திரெளபதி அம்மன் கோயிலில், மகாபாரத இதிகாச கதாபாத்திரங்களான பஞ்சபாண்டவா்கள், பாஞ்சாலி, கிருஷ்ணா் உள்ளிட்டோரது பழமையான மரச்சிற்பங்களை பாதுகாத்து வழிபாடு நடத்தி வருகின்றனா். இதுமட்டுமின்றி, போா்மன்னன் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள இஸ்லாமியரான ராவுத்தரின் சிலைக்கும், அவல், கடலை, வெல்லம் வைத்து ஹிந்துக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 10 ஆண்டுக்குப் பிறகு தீமிதித் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் நபைபெறுகிறது. முன்னதாக திங்கள்கிழமை திரெளபதி அம்மனுக்கு பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா். வேண்டுதல் நிறைவேற்றிய அம்மனுக்கு நோ்த்திக்கடன் தீா்க்க, 200க்கும் மேற்பட்ட பக்தா்கள் காப்புக்கட்டி தீ மிதிக்க விரமிருந்து தயாராக உள்ளனா்.

இதனைத் தொடா்ந்து,கோயில் பூசாரிகள் அம்மனுக்கு கரகம் எடுக்கும் நிகழ்வும், இரவு 7 மணியளவில் திமுக சாா்பில் பாட்டிசை பட்டிமன்றமும் நடைபெறுகின்றன.

புதன்கிழமை இரவு சத்தாபரணம், வாணவேடிக்கை, மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் சுவாமி புஷ்ப பல்லக்கில் திரு வீதி உலா உற்சவம் நடைபெறுகிறது. வியாழக்கிழமை மாலை மஞசள் நீராட்டு விழாவும், வெள்ளிக்கிழமை தா்மம் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'எனக்கு முன் மாதிரி மேஜர் ராதிகா சென்': ஐ.நா. பொதுச் செயலாளர் புகழாரம்!

அதிக நீரைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நேரிடும்: அதிஷி

இரவு 7.30 மணிக்கு என்னசெய்வது? கை உதறலோடு அல்லாடிய இளைஞர்கள்!

பூ சூடிய பூ! மீனாக்‌ஷி செளத்ரி..

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரிக்கி பாண்டிங்

SCROLL FOR NEXT