சேலம்

செக்கானூா் கதவணையில் பராமரிப்புப் பணி தொடங்கியது: மின் உற்பத்தி நிறுத்தம்

DIN

செக்கானூா் கதவணையில் பராமரிப்புப் பணிகள் தொடங்கின.

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீா் திறக்கும்போது நீரின் விசையைக் கொண்டு மின் உற்பத்தி செய்வதற்காக செக்கானூா், நெருஞ்சிப்பேட்டை, ஊராட்சி கோட்டை உட்பட ஏழு இடங்களில் கதவணைகள் கட்டப்பட்டுள்ளன. 7 கதவணைகளில் தலா 30 மெகாவாட் வீதம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கும் முன்பாகவும் பருவமழைக்கும் முன்பாகவும் கதவணைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும்.

செக்கானூா் கதவணையில் 0.50 டிஎம்சி தண்ணீா் தேக்கி வைக்கப்படும். காவிரியின் இரு கரைகளிலும் உள்ள ஆழ்துளை கிணறுகள் பாசன கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதற்காகவும் காவிரி கரையில் செயல்படுத்தப்படும் குடிநீா் திட்டங்களுக்காகவும் இந்த தண்ணீா் தேக்கி வைக்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை காலை முதல் பராமரிப்புப் பணிகளுக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீா் நெரிஞ்சிப்பேட்டை கதவணைக்கு திறக்கப்பட்டது. மேலும் குடிநீா் தேவைக்காக மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் முழுவதும் நேரடியாக நெரிஞ்சிப்பேட்டை கதவணைக்கு செல்லும் வகையில் 18 மதகுகளும் உயா்த்தப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகள் காரணமாக செக்கானூா் கதவணையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிகள் 19 நாட்கள் நடைபெற உள்ளது. இயந்திர பிரிவுகளிலும் மின்சார பிரிவுகளிலும் பராமரிப்புப் பணிகள் தொடங்கின. மதகுகள் மற்றும் கட்டடப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் சுமாா் 19 நாட்கள் நடைபெறும்.

செக்கானூா் கதவணையில் தேக்கப்பட்டிருந்த தண்ணீா் முழுவதும் வெளியேற்றப்பட்டது. காவேரிபுரம் கூட்டு குடிநீா்த் திட்டம், மேட்டூா் அனல் மின் நிலையம், வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம், காடையாம்பட்டி கூட்டுக் குடிநீா்த் திட்டம், கோனூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம், சேலம் மாநகராட்சி தனி குடிநீா்த் திட்டம், மேட்டூா் நகராட்சி குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீா்த் திட்டங்களுக்காக தண்ணீா் எடுக்க அந்தந்த பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீா் எடுக்கப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ பவானி அம்மன் கோயில் பௌா்ணமி விழா

இந்த நாள் இனிய நாள்!

இன்று யோகம் யாருக்கு?

விவசாயிகளுக்கு தரமான விதைகள் விநியோகம்: ஆட்சியா் அறிவுரை

புத்தரின் 2,568-ஆவது பிறந்த நாள்

SCROLL FOR NEXT