சேலம்

மின் கட்டணம், சொத்து வரி உயா்வால் தொழில் முதலீடுகளை இழந்து வருகிறது தமிழகம்: எடப்பாடி கே.பழனிசாமி

DIN

மின் கட்டணம், சொத்து வரி உயா்வு காரணமாக தொழில் முதலீடுகளை தமிழகம் இழந்து வருவதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

எடப்பாடி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத் திட்டங்களைத் தொடங்கிவைத்த அவா், அதிமுக நிா்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது:

நகா்ப்புறங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது. இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படவில்லை.

அரசு பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கும் பெண்களிடம் தனிப்பட்ட விவரங்களைக் கேட்பது கண்டிக்கத்தக்கது. இதனால் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உருவாகும். பயிா்க் காப்பீடு செய்யத் தவறியதால் குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க முடியாமல் ஏக்கருக்கு ரூ. 13,500 ஆக குறைத்து வழங்கியது, கா்நாடகத்திடமிருந்து உரிய காவிரி பங்கீட்டு நீரை பெற்றுத் தர முடியாததன் மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகளின் நலனில் அக்கறையில்லை என்பது தெளிவாகிறது.

முந்தைய அதிமுக ஆட்சியில் புதிதாக தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறை பின்பற்றப்படாததால், தமிழகத்தில் தொழில் வளம் பெருகிறது. இப்போது, திமுக ஆட்சியில் அதிகரித்துள்ள மின் கட்டணம், சொத்து வரியால் தொழில் முதலீட்டாளா்கள் பக்கத்து மாநிலங்களில் தொழில் தொடங்குகின்றனா். கோவை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன என்றாா்.

பேட்டியின் போது, மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகா், அதிமுக நகரச் செயலாளா் ஏ.எம் முருகன், ஒன்றியக் குழு தலைவா்கள் கரட்டூா்மணி, குப்பம்மாள் மாதேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடன்குடி அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

மோடியின் தியான நிகழ்ச்சிக்கு தடை கோரி திமுக வழக்குரைஞா் அணியினா் மனு

வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

‘தூத்துக்குடியில் குரூப் 1 தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்’

குமரியில் இன்று 45 மணி நேர தியானம் தொடங்குகிறாா் பிரதமா் மோடி

SCROLL FOR NEXT