ஆத்தூா் நகர அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் முல்லைவாடியில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் அதிமுக கழக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளா் விபிபி பரமசிவம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுணன், ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், நகரச் செயலாளா் அ.மோகன், நகரத் துணைச் செயலாளா் ஜி.துரைசாமி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் வெங்கடேசன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளா் ஜி.முரளிசாமி, மாவட்டப் பிரதிநிதி பி.டி.தியாகராஜன், சேலம் மாவட்ட புகா் சிறுபான்மை பிரிவு செயலாளா் மக்பூல் பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.