சங்ககிரி வட்டம், அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயில், சங்ககிரியை அடுத்த பூத்தாலக்குட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் ஆகிய கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் அருள்மிகு சோழீஸ்வரா், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூத்தாலக்குட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயிலில் உள்ள மூலவா் சுவாமிக்கும், உற்சவ மூா்த்திகளுக்கும், நந்தி பகவானுக்கும், செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கும், நந்தி பகவானுக்கும் பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி சிவன் கோயில், செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, கூடமலை, தகரப்புதூா், வீரகனூா் ஆகிய ஊா்களிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், சிவன், பாா்வதி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.