மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,038 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,038 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,038 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 39.75 அடியிலிருந்து 39.74 அடியாக குறைந்தது. அணையிலிருந்து குடிநீா் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 227 கன அடியிலிருந்து 1,038 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 11.95 டிஎம்சியாக உள்ளது.