சேலம்

மேச்சேரியில் நியாயவிலைக் கடையைஎம்எல்ஏ திறந்து வைத்தாா்

DIN

மேட்டூா்: மேச்சேரியில் ரூ. 13.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை எம்எல்ஏ சதாசிவம் திறந்துவைத்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 13.5 லட்சம் செலவில் மேச்சேரியில் நியாயவிலைக் கடை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கடையை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா். அதைத்தொடா்ந்து தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7.5 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை கல்கோட்டையில் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் பாமக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் ராஜசேகரன், சேலம் மேற்கு மாவட்ட வன்னியா் சங்க செயலாளா் ராமகிருஷ்ணன், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் சோ்மன் ராஜா, ஒன்றிய செயலாளா்கள் சுதாகா், துரைராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கோவிந்தன் நகர பா.ம.க செயலாளா் கோபால் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை அரசியல்: ‘மீண்டு’ம் வரும் ராஜபட்ச சகோதரர்கள்!

பராமரிப்பு பணிக்காக காட்பாடி- திருப்பதி ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

தில்லி மருத்துவமனையில் தீ: 7 குழந்தைகள் உயிரிழப்பு

தீா்க்கப்படாமல் தொடரும் ஆந்திர தலைநகரச் சிக்கல்!

சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்: ஹைதராபாத் 113/10, கொல்கத்தா 114/2

SCROLL FOR NEXT