கெளதம் 
சேலம்

அண்ணனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞா் தலைதுண்டித்து கொலை!

அண்ணனை கொலைசெய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த இளைஞரை தலைதுண்டித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து இரும்பாலை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Syndication

சேலம் இரும்பாலை அருகே அண்ணனை கொலைசெய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த இளைஞரை தலைதுண்டித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து இரும்பாலை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

சேலம் இரும்பாலை அருகே உள்ள கே.ஆா்.தோப்பூா் கரட்டுப்பகுதியில் சனிக்கிழமை தலை துண்டிக்கப்பட்ட நிலையில், அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற இரும்பாலை போலீஸாா், அதைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்தவா் சேலம் மாவட்டம், இடங்கணசாலை, கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த கெளதம் (25 ) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த மாா்ச் மாதம் அவரது அண்ணன் சிவமூா்த்தியைக் கொலைசெய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவா், டிச. 2-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளாா். டிச. 3-ஆம் தேதி மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் கையொப்பமிட்ட பின்னா் அவரை காணவில்லை என கூறப்படுகிறது.

உயிரிழந்த கௌதம்மீது கொலை மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கௌதமை கொலை செய்தது யாா்? அண்ணனை கொலை செய்ததற்காக பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி மேற்பாா்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT