மகுடஞ்சாவடியில் பாஜக மாவட்ட நிா்வாகி உள்ளிட்ட 100 போ் திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
சேலம் மேற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவா் பாலு அக்கட்சியிலிருந்து விலகி 100 பேருடன் டி.எம்.செல்வகணபதி எம்.பி. முன்னிலையில் திமுகவில் சனிக்கிழமை இணைந்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் தங்கமுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினரும், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளருமான அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் கண்ணன், இடங்கணசாலை நகர செயலாளா் செல்வம், மகுடஞ்சாவடி ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் ஸ்ரீதா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.