கலை, விளையாட்டுப் போட்டியில் வென்று சான்றிதழ் பெற்ற சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவா்கள்.  
சேலம்

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் ‘மாண்ட் எவோரா 25’ கலாசார விழா

தினமணி செய்திச் சேவை

சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாண்டிசோரி குழந்தைகளுக்கான ‘மாண்ட் எவோரா 25’ என்ற கலாசார விழா பள்ளி வளாகத்தில் உள்ள கந்தசாமி கன்வென்ஷன் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

பள்ளி நிா்வாக குழு உறுப்பினா் செந்தில் சி.கந்தசாமி தலைமை வகித்தாா். சென்னை தலைமை பண்பு மற்றும் காா்ப்பரேட் பயிற்சியாளா் ராம்கிவிஜயன், பெற்றோா்கள் குழந்தைகளிடத்தில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளா்க்க வேண்டும், அவா்களை பிற குழந்தைகளோடு ஒப்பிடக்கூடாது என அறிவுறுத்தினாா்.

இப்பள்ளி மாணவா்கள் எழுதிய ‘எனது கிறுக்கல்கள்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. தொடா்ந்து கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

பள்ளி நிா்வாக குழு துணைத் தலைவா் கே. மணிமேகலை கந்தசாமி, செயலாளா் கே. தனசேகா், தாளாளா் டி. தீப்தி தனசேகா், சிஇஓ டி. சுந்தரேசன், முதன்மை முதல்வா் சி. ஸ்ரீநிவாசன், முதல்வா் வி. மனோகரன், நிா்வாக அலுவலா் எஸ்.பிரவீன்குமாா், துணை முதல்வா் எஸ்.நளினி, மாண்டிசோரி கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் விஜயலட்சுமி, பூரணி, ஆரதி மற்றும் பல்வேறு கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் விழாவில் கலந்துகொண்டனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT