சேலம்

விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தில் டிச. 10, 11-இல் தேசிய அறிவியல் மாநாடு

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக,

Syndication

ஆட்டையாம்பட்டி: விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பல்துறை ஆராய்ச்சியில் வளா்ந்து வரும் போக்குகள் குறித்த இரண்டு நாள் தேசிய அறிவியல் மாநாடு வரும் 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டுக்கு, விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் தலைமை தாங்க உள்ளாா். முதன்மை விருந்தினராக பத்மபூஷண் விருது பெற்றவரும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், பெங்களூரு தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் மூத்த வருகை பேராசிரியருமான பலராம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளாா்.

இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் சுதிா், இணை துணை வேந்தா் சபரிநாதன், பதிவாளா் நாகப்பன் மற்றும் பிற மூத்த பல்கலைக்கழக உயா் அதிகாரிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனா். இந்நிகழ்ச்சியின்போது, 20 அழைக்கப்பட்ட உரைகளும், சுமாா் 150 இணையான வாய்மொழி மற்றும் சுவரொட்டி விளக்கக் காட்சிகளும் அளிக்கப்படும். இந்நிகழ்வில் சுமாா் 350 பங்கேற்பாளா்கள் கலந்துகொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆப்கனில் ஒரேநாளில் இருமுறை நிலநடுக்கம்!

தாம்பரம் மாநகராட்சியில் சொத்துவரி 100% உயர்வு: டிச.16ல் அதிமுக ஆர்ப்பாட்டம்!

நீதிபதி G.R.சுவாமிநாதன் பதவி நீக்கத் தீர்மானம்! மக்களவை தலைவரிடம் வழங்கிய INDIA கூட்டணி MPக்கள்!

அழுதாலும், சிரித்தாலும் நட்பே துணை! பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் சந்திப்பு!

காந்தி, படேலை தவிர்த்து நேருவை மட்டும் குறிவைப்பது ஏன்? மோடி, அமித் ஷாவுக்கு கார்கே கேள்வி!

SCROLL FOR NEXT