சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
சேலம்

இலவச வீட்டுமனை வழங்கக்கோரி ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில், சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் உள்ள கூலித் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி, சங்ககிரி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கும் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த கந்தா்வகோட்டை சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை தலைமை வகித்தாா்.

இதில், கூலித் தொழிலாளா்கள், பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் வீட்டுமனை இல்லாமல் சிரமமடைந்து வருகின்றனா். மத்திய அரசின் பிரதமா் வீடுகட்டும் திட்டம், மாநில அரசு சாா்பில் கனவு இல்ல திட்டம் ஆகிய திட்டங்களின் சாா்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகை தற்போதைய விலைவாக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநில அரசு வழங்கும் நிதியை ரூ. 6 லட்சமாக வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

வட்டச் செயலாளா்கள் ஆா்.பழனிசாமி (சங்ககிரி), சி.எஸ்.பழனியப்பன் (எடப்பாடி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து, சங்ககிரி கோட்டாட்சியரிடம் மனு அளிக்க காத்திருந்தனா். நீண்ட நேரமாகியும் கோட்டாட்சியா் வராததால், அலுவலக நுழைவு வாயில் முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

சங்ககிரியை அடுத்த புள்ளிப்பாளையத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் இருந்த கோட்டாட்சியா், இதுகுறித்து தகவலறிந்து வந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT