சேலம்

கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

தினமணி செய்திச் சேவை

ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் நகராட்சி, 33-ஆவது வாா்டு அம்பேத்கா் நகரில் உள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் தலைமையில் நடைபெற்றது.

இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 12 லட்சம் செலவில் இந்த கான்கிரீட் சாலை அமைக்க உள்ளது.

இந்நிகழ்வில், ஆத்தூா் நகர செயலாளா் அ.மோகன், நிா்வாகி அன்புச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT