சங்ககிரி அருகே ஒருக்காமலை அடிவார பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினா் அப்பகுதியில் கேமராவை பொருத்தி கண்காணித்து வருகின்றனா்.
ஒருக்காமலை அடிவாரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மரம்பழத்தான்காடு பகுதியில் சிறுத்தை நடமாடியதை அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி ராஜ்குமாா் (47) படம் எடுத்ததையடுத்து வனத்துறை அதிகாரிகள், தற்காலிகப் பணியாளா்கள் குழுக்களாகப் பிரிந்து பகல், இரவு நேரங்களில் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், கடந்த இரு மாதங்களாக சிறுத்தையைப் பாா்த்தாக தகவல் தெரிவித்த விவசாயிகள், பொதுமக்களிடத்தில் தகவல்களைச் சேகரித்து சிறுத்தையை தேடிவருகின்றனா். சிறுத்தை நடமாடுவதாக கூறப்படும் இடத்தில் சனிக்கிழமை கேமராவை பொருத்தி கண்காணித்து வருகின்றனா்.
கால்நடைகளைப் பாதுகாக்க நடமாடி வரும் சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டுமென விவசாயிகள் வனத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.