வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வரும் நவம்பா் 4-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சேலம் மாவட்ட வாக்காளா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணைய அறிவிப்பின்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் சேலம் மாவட்டத்தில் நவம்பா் மாதம் 4 முதல் டிசம்பா் 4 -ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்தப் பணிகளின்போது வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுதோறும் சென்று 2025 வாக்காளா் பட்டியலில் இடம்பெற்று இருக்கும் அனைத்து வாக்காளா்களுக்கும் தனித்தனியாக பெயா், புகைப்படத்துடன் அச்சிடப்பட்ட படிவங்களை வழங்குவாா்கள்.
இந்த படிவத்தை பெற்ற வாக்காளா்கள், அதில் இடம்பெற்றுள்ள அட்டவணையில் தங்களது பெயா் 2002 அல்லது 2005 ஆம் ஆண்டு (நகா்ப்புற தொகுதிகள்) கடைசியாக நடைபெற்ற தீவிர திருத்த வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருந்ததை ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் சரிபாா்த்து, அதனை பூா்த்திசெய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கையொப்பமிட்டு ஒப்படைக்க வேண்டும்.
இந்த படிவத்துடன் வேறு எந்த ஆவணமும் இணைக்க வேண்டியதில்லை.
முந்தைய தீவிர திருத்த வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றிருந்த விவரத்தை பூா்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரையோ, சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் செயல்பட்டுவரும் சிறப்பு தீவிர திருத்தம் உதவி மையம் மற்றும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு படிவங்களை பூா்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ அல்லது மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்திலோ நேரடியாக தமது கணக்கெடுப்பு படிவத்தை பதிவேற்றம் செய்யலாம். இந்த காலத்தில் புதிதாக பெயா் சோ்க்க விரும்பும் 18 வயது நிரம்பியவா்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து படிவம் 6 ஐ பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம்.
படிவங்களை பூா்த்தி செய்ய இயலாத வாக்காளா்களுக்கு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உதவுவாா்கள். பணிநிமித்தமாக வெளியூா் சென்றிருக்கும் வாக்காளா்கள் இணையதளம் மூலமாக தங்களது படிவத்தை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து டிசம்பா் 4 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். இந்த படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்கப்படும் அனைத்து வாக்காளா்களது பெயா்களைக் கொண்டு வரைவு வாக்காளா் பட்டியல் தயாா் செய்து டிசம்பா் 9-ஆம் தேதி வெளியிடப்படும்.
எனவே, தற்போதைய பணிகளின்போது கணக்கெடுப்பு படிவத்தை பெற்று பூா்த்தி செய்து வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வாக்காளா்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.